``ஒன்னும் செய்ய முடியாது... `Work From Home' விஜய்..'' - தமிழிசை அட்டாக் | Vijay | Tamilisai

Update: 2025-02-02 08:08 GMT

Work From Home மற்றும் இணையதளத்தில் தான் பணியாற்ற வேண்டும், களத்தில் இறங்க வேண்டாம் என விஜய் நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது என, பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். செங்கல்பட்டு திம்மராஜகுளம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களோடு மக்களாக பழகுகின்ற தலைவர்களே, சரியான தலைவர்கள் என்று தாங்கள் நினைப்பதாகக் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்