திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் என்பவரை நியமித்து அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது. இந்த விவகாரத்தில், அவர் கட்சி பின்புலம் இல்லாத நபரா? இல்லையா என்பதை சட்ட உதவி மையத்தின் செயலாளராக உள்ள மாவட்ட நீதிபதியை நியமித்து பெறப்பட்ட அறிக்கையின் படியே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனுதாரரும், பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத் தலைவருமான T.S.சங்கர் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.