Edappadi Palanisamy | ADMK | EPS-க்கு சால்வை கொடுத்தவர் தாக்கப்பட்டாரா?

Update: 2025-12-31 09:57 GMT

ஈபிஎஸ்-க்கு சால்வை கொடுத்த அதிமுக நிர்வாகி தாக்கப்பட்டதாக புகார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை கொடுத்த அதிமுக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனியாக சால்வை கொடுத்த அதிமுக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொளத்தூர் 200 அடி சாலைக்கு வந்தபோது, அதிமுக நிர்வாகி ஆறுமுகம் என்பவர், தனியாக சென்று சால்வை கொடுத்ததாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த அதிமுக வட்டச்செயலாளர் முருகதாஸ் என்பவர் உட்பட அதிமுகவினர் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக முருகதாஸ் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்