சென்னையில் விபத்தில் சிக்கிய நபரை தனது காரில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற அமைச்சர்
சென்னையில் சாலை விபத்தில் சிக்கிய நபரை அமைச்சர் மா சுப்பிரமணியன் காரில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். தனது இல்லத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு புறப்பட்ட போது காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். அவரை அமைச்சர் மா சுப்பிரமணியன் பத்திரமாக மீட்டு கார் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.அந்த காட்சிகள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.