"500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்" - சந்திரபாபு நாயுடு

Update: 2025-05-28 07:24 GMT

500 ரூபாய் நோட்டுகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் அக்கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். மாநாட்டில் உரையாற்றிய அவர், பெரிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒழித்தால்தான் கருப்புப் பணம் ஒழியும் எனக் கூறினார். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, நாட்டில் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்