தவெகவில் இணைந்த 300 பேர் - ஆனந்த் சொன்ன வார்த்தையால் தொண்டர்கள் ஆரவாரம்
கன்னியாகுமரி சென்ற தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆனந்த் தக்கலை பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், தமிழகத்திலேயே தனக்கு சிறப்பான வரவேற்பை தந்தது குமரி மாவட்டம் என புகழ்ந்ததால் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர்.