PF | Pension Scheme | நாடு முழுவதும் வேலைக்கு செல்லும் அனைவருக்கும்.. ரூ.2500-ஆக உயர்கிறது..!

Update: 2025-09-12 08:28 GMT

பி.எஃப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி- விரைவில் அமல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் வசதியை தீபாவளிக்கு முன் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் அடுத்த மாதம் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில்,

பி.எஃப். பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 8 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர் என கூறப்படுகிறது.

இது மட்டுமன்றி தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்