முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது தோலில் இருந்து புற்றுநோய் பாதித்த செல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார். கடந்த மே மாதம் அவருக்கு தோல் புற்றுநோய் உறுதியான நிலையில், தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.