Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (30.01.2026) | 11 AM Headlines | ThanthiTV
- தேசிய ஜனநாயக கூட்டணி சுயநலத்துடன் செயல்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்....மாநிலங்கள் தான் நாட்டின் அடித்தளம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்...
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்...கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, வெளிப்படையான. விசாரணை நடத்தவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்...
- சென்னையில் தொடர்ந்து ஏற்றம் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 4 ஆயிரத்து 800 ரூபாய் குறைந்துள்ளது.....ஒரு கிராம் தங்கம் 16 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
- தங்கத்தோடு போட்டி போட்டு உயர்ந்த வெள்ளி விலை இன்று கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது....ஒரு கிராம் தங்கம் 415 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யபப்டுகிறது...
- சபரிமலை தங்கக் கொள்ளை விவகாரம் தொடர்பாக மலையாள நடிகர் ஜெயராமிடம், சென்னையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி உள்ளனர்.....துவார பாலகர் சிலை குறித்த கேள்விகளுக்கு ஜெயராம் பதிலளித்த நிலையில், இந்த வழக்கில் அவர் சாட்சியாக சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது..
- கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் ஆட்டோ மீது கார் மோதியதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர், எதிரே வந்த லாரி மோதி உடல்நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..ஆட்டோவில் இருந்த பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், விபத்து குறித்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது...
- டிரம்பின் அமைதி வாரிய முன்னெடுப்புக்கு பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் வர்சென் அகபேகியன் ஷாஹின் வரவேற்பு தெரிவித்துள்ளார்...டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனி பாலஸ்தீன நாடு உருவாக அமைதி வாரியம் வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்...