காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (26-08-2025) | 11 AM Headlines | Thanthi TV

Update: 2025-08-26 05:48 GMT
  • விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்....மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.....
  • பெரு நாட்டை நெருங்கி வரும் சூறாவளியால் கடும் கடல்சீற்றம் ஏற்பட்டுள்ளது.....சுமார்100 துறைமுகங்கள் மூடப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.....
  • டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது....பண மோசடி வழக்கு தொடர்பான புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது......
  • நீலகிரி மாவட்டம் கொட்டாடு பகுதியில் வீட்டின் முன்பாக இருந்த கம்பி வேலியை அறுத்துவிட்டு கட்டை கொம்பன் காட்டுயானை வீட்டின் உள்ளே நுழைந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.....
  • தங்கம் விலை சவரனுக்கு 400‬ ரூபாய் உயர்ந்துள்ளது.....ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்து 355 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.....
  • காலை உணவு திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பாராட்டு தெரிவித்துள்ளார்....பஞ்சாபிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்......
  • காலை உணவுத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்....காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்து இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்....
  • 2 ஆயிரத்து 430 நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.....
  • விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்....
Tags:    

மேலும் செய்திகள்