ஸ்கூட்டியை திருடும் மராட்டிய கும்பல்...OLX-ல் அதிரடி காட்டிய போலீசார்!

Update: 2025-09-17 02:46 GMT

தாம்பரத்தில் மோட்டார் சைக்கிளை திருடி OLX மூலம் விற்க முயன்ற மராட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இரும்புலியூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரது ஸ்கூட்டி, கடந்த 12ஆம் தேதி திருடுபோயுள்ளது.

இதுகுறித்து தாம்பரம் போலீசில் புகார் அளித்திருந்த விக்னேஷ், கடந்த 14 ஆம் தேதி OLX தளத்தில் சோதனை செய்தபோது தனது வாகனம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்க விளம்பரம் செய்யப்பட்டிருந்ததை பார்த்து ஷாக் ஆனார்.

பின்னர் போலீசார் விக்னேஷ் மூலமாக மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவதுபோல் மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பி எங்கே வரவேண்டும் என கேட்டுள்ளனர்.

அவர்கள் பெருங்களத்தூர் அருகே வருமாறு எனக்கூறியதை அடுத்து, அங்கே சென்று போலீசார் 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் இருவரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்