Kerala | சிக்காமல் இருக்க ஓட்டமெடுத்த கும்பல்.. சேஸ் செய்த போலீஸை ஸ்பாட்டிலேயே கொல்ல முயற்சி
Kerala | சிக்காமல் இருக்க ஓட்டமெடுத்த கும்பல்.. சேஸ் செய்த போலீஸை ஸ்பாட்டிலேயே கொல்ல முயற்சி
போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற மணல் கடத்தல் கும்பல்
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல், காவல்துறையினரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரி நிற்காமல் சென்றதால் போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு காவலர்களை மணல் கடத்தல் கும்பல் லாரி ஏற்றி கொல்ல முயன்றனர். இதையடுத்து லாரியை ஓட்டி வந்த சுஹைல் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.