India vs Sri Lanka | மைதானத்தில் `தீ’ பறக்க ஆடிய ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா - வரலாற்று வெற்றி

Update: 2025-12-29 03:05 GMT

இலங்கைக்கு எதிரான 4வது டி 20 போட்டியிலும், இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள், ஷஃபாலி வர்மா 79 ரன்கள் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது மட்டுமல்லாமல், 4க்கு பூ​ஜ்ஜியம் என்ற கணக்கையும் அடைந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்