பைடன் குறித்த ரகசியங்களை தைரியமாக வெளியே சொன்ன கமலா ஹாரிஸ்

Update: 2025-09-12 02:44 GMT

பைடனுக்கு எதிராக கமலா ஹாரிஸ் பரபரப்பு கருத்து

பைடன் ஈகோவால் தான் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன் 2024ல் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது குறித்து "107 நாட்கள்" என்ற தனது புதிய நினைவுக் குறிப்பில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் மனம் திறந்துள்ளார். கட்சிக்கோ அல்லது நாட்டிற்கோ எது சிறந்தது என்பதை விட அந்த முடிவு ஈகோவால் எடுக்கப்பட்டதாக கமலா குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிட வேண்டாம் என அவரை தான் வலியுறுத்த நினைத்ததாகவும், ஆனால் அது தன் தனிப்பட்ட ஆதாயம், விசுவாசமின்மை போல் தோன்றுமோ என்ற தயக்கத்தால் எதுவும் கூறவில்லை எனவும் பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார்... மேலும் 81 வயதில் பைடன் வெளிப்படையாகவே சோர்வாகவும், அதிக "தடுமாற்றங்களுடன்" இருந்ததாகவும், தான் அதிக விமர்சனங்களுக்கு ஆளானபோது பைடன் குழுவில் இருந்தவர்கள் தனக்கு போதிய ஆதரவு தரவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்