ஒத்த ரீல்ஸால் கணவன் கதையே க்ளோஸ் - ஸ்மார்ட்டாக போலீசிடம் பிடித்து கொடுத்த மனைவி

Update: 2025-09-03 09:34 GMT

மனைவியை பிரிந்து 7 ஆண்டுகள் தலைமறைவு-ரீல்ஸ் வீடியோவால் சிக்கிய கணவர்

மனைவியை கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவர், வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து பதிவிட்ட ரீல்ஸ் வீடியோவால் சிக்கினார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பப்லு என்ற நபருக்கும் ஷீலு என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் பப்லூ தலைமறைவானார். இதனையடுத்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து பதிவிட்ட ரீல்ஸ் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷீலு அளித்த புகாரின் பேரின் பஞ்சாப்பில் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த பப்லூவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்