ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தானால் ஏவப்பட்ட பீரங்கி குண்டுகளை இந்திய ராணுவத்தினர் வெடிக்கச் செய்து செயலிழக்கச் செய்தனர். ரஜோரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கிடந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த நடவடிக்கையை ராணுவத்தினர் தீவிரப்படுத்தினர்.