கேரள மாநிலம் கோட்டயம் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவியின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் மாணவி இறங்குவதற்கு முன்பே, பேருந்தை இயக்கியதால், நிலை தடுமாறிய மாணவி பேருந்தில் இருந்து சாலையில் விழுந்துள்ளார். மாணவி சாலையில் விழுந்த போதும் பேருந்து ஓட்டுனர் பேருந்து நிறுத்தாமல் எடுத்துச் சென்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக மாணவி காயங்கள் எதுமின்றி உயிர் தப்பிய நிலையில் காண்போரை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...