Today Headlines | காலை 6 மணி தலைப்புச்செய்திகள் (07.11.2025)| 6 AM Headlines | Thanthi TV
"6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு"
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்...
தேனி, விருதுநகரிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பொதுக்கூட்டங்களில் பத்தாயிரம் பேர் கூடினால் ஒரு லட்சம் ரூபாய், 20 ஆயிரம் பேர் கூடும் கூட்டத்திற்கு 3 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்...
50 ஆயிரம் பேருக்கு மேல் கூடினால் வைப்புத்தொகை 20 லட்சம் ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் E-சிகரெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. 3 ஆண்டுகள் சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து, திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது...
தமிழகத்திற்கு நவம்பர் மாதம் வழங்க வேண்டிய 13 புள்ளி 78 டிஎம்சி காவிரி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவிற்கு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.....காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45-ஆவது கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, ஓராண்டு கொண்டாட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.... டெல்லி இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தையும் வெளியிடுகிறார்..
2026 தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையே தான் பேட்டியிருக்கும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்... சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு போதும் எடப்பாடி பழனிசாமியுடன் செல்ல மாட்டேன் என்றார்...
கரூர் சம்பவம் தொடர்பாக தான் பேசியதை ஒரு சிலர் விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பதாக நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்..... நாட்டிற்கு பெருமை சேர்க்கும், பணியில் உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் கருத்து....