Sabarimala Temple Crowd | சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் - ஒரு நிமிடத்திற்கு இவ்ளோ பேரா?
மார்கழி முதல் நாளில் சபரிமலையில் 5 மணிநேரத்தில் 27 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மார்கழி பிறப்பையொட்டி, சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நிமிடத்துக்கு தலா 80 பேர் வீதம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். நடைப்பந்தலில் நான்கு மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து வழிபாடு செய்தனர்.