சமையல் மாஸ்டரின் `பயங்கரவாத’ பின்னணி - அதிர்ந்து நிற்கும் இந்தியா

Update: 2025-08-17 04:33 GMT

பாக். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு - ஹோட்டல் சமையல் மாஸ்டர் கைது

ஆந்திர மாநிலம், தர்மவரம் நகரில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, ஹோட்டல் சமையல் மாஸ்டரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். சமையல் மாஸ்டர் நூர் முகமது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அவருடைய நடவடிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்காணித்து வந்தனர். அதைத் தொடர்ந்து, அவருடைய வீட்டில் சோதனை நடத்தி, 20 சிம்கார்டுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்த சிம்கார்டுகளைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப் வழியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் நூர் முகமது தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்