ஆட்டோவை 2 கி.மீ. தரதரவென இழுத்துச் சென்ற லாரி.. நடுங்க வைக்கும் வீடியோ

Update: 2026-01-02 15:52 GMT

உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் ஆட்டோவை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரி இழுத்து சென்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹமீர்பூரில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரி, முன்னால் சென்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிக் கொண்ட ஆட்டோவை, 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் தரதரவென லாரி ஓட்டுநர் இழுத்துச் சென்றார். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் அதில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்..

Tags:    

மேலும் செய்திகள்