``ஆளுநருக்கு ஸ்பெஷல் உரிமை.. அவர் முடிவை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த முடியாது’’
ஆளுநர் RN ரவிக்கு சிறப்பு உரிமை இருப்பதாக மத்திய அரசு தகவல்
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுக்கும்பட்சத்தில், அவரது முடிவை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாது என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆளுநர்கள், குடியரசு தலைவர் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு 3 மாதத்தில் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க வேண்டுமென அரசியல்சாசன அமர்வு அறிவுறுத்தியது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து குடியரசு தலைவர் சில குறிப்புகளை வெளியிட்டார்.
இந்த விவகாரத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் தினசரி அடிப்படையில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில்,
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆளுநர்களுக்கு சிறப்பு உரிமைகளை அரசியலமைப்பு பிரிவு 200 வழங்குவதை நினைவுகூர்ந்தார்.
மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர் பாலமாக செயல்படுவதாக கூறிய அவர், சில தருணங்களில் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தலாம் என வாதிட்டார்.
இதன் காரணமாக ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும்பட்சத்தில், அதனை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.