பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் வழக்கமான அலுவலை ஒத்திவைத்துவிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என 34 எதிர்க்கட்சி எம்.பிக்கள் நோட்டீஸ் வழங்கினர். இதனை ஏற்க முடியாது என அறிவித்த மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ், தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் கீழ் இல்லை என்பதால் அவையில் விவாதிக்க முடியாது எனக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.