மயக்கம் அடைந்த ஓட்டுநர்- சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்திய நடத்துநர்..
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில், தலச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் அஸ்வந்த் இருக்கையிலேயே திடீரென மயக்கம் அடைந்ததால், நடத்துநர் சாயுஜ் உடனடியாக ஹேன்ட் பிரேக்கை பயன்படுத்தி, பேருந்தை நிறுத்தினார். நடத்துநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர். மயக்கமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.