பாலுறவு வயதை 16 ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திற்கு ஆலோசனை

Update: 2025-07-25 03:29 GMT

பாலுறவு வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுவர்களையும், பலவந்தமாக பாலியல் சீண்டலில் ஈடுபடுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரே மாதிரியாக நடத்தக்கூடாது என்றுகூறியுள்ளார்.

பாலியல் சீண்டல், சம்மதத்துடன் பாலுறவு இந்த இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க சட்டம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். வளர் இளம் பருவத்தினரிடையே சம்மதத்துடனான பாலுறவுக்கு போக்சோ, பாலியல் வன்கொடுமை சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்