டிராக்டருக்கு வசிப்பிடச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் - சர்ச்சை
பீகாரில் டிராக்டருக்கு இருப்பிடச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் சோனாலிகா டிராக்டர் என்ற பெயரில், புகழ்பெற்ற போஜ்புரி நடிகையான சோனாலிகா புகைப்படத்தை இணைத்து அந்த சான்றிதழ் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் அப்பாவின் பெயராக சுவராஜ் டிராக்டர் எனவும் , அம்மாவின் பெயராக கார் தேவி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டதில் போலி என தெரிய வந்ததை தொடர்ந்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.