Shahbaz Sharif | India|``சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா''.. ஐ.நா.வில் புலம்பிய பாகிஸ்தான் பிரதமர்
சிந்து நதி நீரை இந்தியா நிறுத்துவது நியாயமல்ல என பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியு யாரிக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அவர், சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்குவதை நிறுத்துவதன் மூலம் இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச ஒப்ப்தந்தத்தை மீறுவதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தான் மக்களுடன் நின்று இந்த உரிமைக்காக விடாமல் போராடுவோம் என கூறிய அவர், இதனை ஒரு போராகவே பாகிஸ்தான் கருதுவதாக அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், காஷ்மீர் மீதான இந்தியாவின் ஆதிக்கம் ஒருநாள் நிறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.