"நீ பங்களாதேஷியா" ஒடிஷாவில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கொலை

Update: 2025-12-26 07:42 GMT

ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின்பேரில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சாம்பல்பூரில் தங்கியிருந்த மேற்கு வங்க தொழிலாளர்களிடம் உள்ளூரை சேர்ந்த ஒரு கும்பல் பீடி கேட்டிருக்கிறது. தொடர்ந்து, அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்தத் தொழிலாளர்களின் ஆதார் அட்டையைக் கேட்டது மட்டுமன்றி, அவர்களை அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கவும் தொடங்கியது.

இதில் ஜூயல் ஷேக் என்ற தொழிலாளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொழிலாளியை அடித்துக் கொன்றதாக 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஒடிசாவை ஆளும் பாஜக அரசை திரிணாமூல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்