ஆம்புலன்ஸை கடத்திய ஸ்கூல் மாணவர்கள்? - `குபீர்’ காரணம்

Update: 2025-12-31 06:53 GMT

கேரள மாநிலம் கள்ளம்பலத்தில் 13 வயதுள்ள 2 மாணவர்கள் முஸ்லீம் ஜமாத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸை கடத்திய நிலையில், மாணவர்கள் மற்றும் ஆம்புலன்ஸை போலீசார் மீட்டனர். கடத்திய ஆம்புலன்ஸை, மாணவர்கள் ரயில் நிலையத்தில் விட்டு விட்டு, ரயில் ஏறி கோழிக்கோடு சென்றுள்ளனர். ஆம்புலன்ஸை மீட்ட போலீசார் மாணவர்களின் செல்போன் சிக்னலை வைத்து அவர்களையும் மீட்டனர். விசாரணையில் ஆம்புலன்ஸை கடத்தவில்லை எனவும், மாணவர் ஒருவருக்கு வாகனம் ஓட்டத் தெரிந்ததால், ஓட்டிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்