கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் 85 வயது முதியவர் காரை பார்க்கிங்கில் இருந்து எடுக்க முயற்சித்த போது, கார் பேக்கரிக்குள் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் பேக்கரியை விட்டு அவசமாக காரை பின்பக்கமாக திருப்ப முயன்று வேறு ஒரு காரில் மோதியுள்ளார். இந்த விபத்தில் பேக்கரியின் கண்ணாடி கதவுகள் அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவ இடத்தில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.