மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி.. தரமறுத்த பேக்கரி கடைக்காரரை கடப்பாரையை காட்டி அட்டகாசம்
தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் மாமுல் தர மறுத்த பேக்கரி கடை உரிமையாளரை, ரவுடி ஒருவர் கடப்பாரையுடன் வந்து மிரட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர் தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.