Rahul Gandhi | Tejashwi Yadav | Bihar Election | பீகார் தேர்தல் - ராகுலுக்கு ஷாக் கொடுத்த தேஜஸ்வி?

Update: 2025-10-21 02:42 GMT

பீகார் தேர்தல் - இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆர்ஜேடி பீகார் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம், மொத்தம் 143 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறுகிறது. நவம்பர் 14-இல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவு வெளியாகிறது. சட்டப் பேரவைத் தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் முடிவடையும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 143 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிகட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் உடனான கூட்டணியில் தொகுதிபங்கீடு இறுதியாகாத நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது பீகார் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் இம்முறை ரகோபூர் தொகுதியில் போட்டியிடுவதாக வேட்பாளர் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்து களம் காண்கிறது. எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் இதுவரை 224 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 19 தொகுதிகள் எந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்