இந்தியாவில் 5 ஜி சேவை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Update: 2022-10-01 02:56 GMT

5-ஜி என்பது 5 ஆம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையாகும்... இது இந்திய இணைய சேவையில் புதிய புரட்சியை செய்யவிருக்கும் சேவை என்றால் மிகையாகாது.

வரலாற்றில் முதல் முறையாக 1-ஜி அறிமுகமான போது வயர் இணைப்பில்லாது போனில் பேசும் வசதி அறிமுகமானது. 2-ஜியில் SMS,MMS வசதியுடன் வயர் இணைப்பு இல்லாத இன்டர்நெட், 3-ஜியில் வேகமான இன்டர்நெட் வசதி, 4-ஜியில் லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி. என அதிவேக இன்டர்நெட் வசதி என சேவை அப்கிரேடானது.

அந்த வகையில் வரும் 5ஜியில் 4ஜி-யை விடவும் 100 மடங்கு இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். இது ஒரு வீடியோவை வேகமாக டவுன்லோடு செய்ய உதவும்.

பிற சாதனங்கள் இணைப்பு வசதி, மெமரிகார்டு, பென் டிரைவ் இல்லாது உங்கள் தரவுகளை சேமிக்கும் கிளவுட் வசதியென மேம்பட்ட வசதியை வழங்கவிருக்கிறது. நாட்டில் ஏற்கனவே 5-ஜி அலைக்கற்றைகள் ஏலம் விடப் பட்டுவிட்ட நிலையில், இன்று பயன்பாட்டுக்கு வருகிறது, பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைக்கிறார்.

முதல்கட்டமாக புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஐதராபாத், பெங்களூரு, புனே, அகமதாபாத், காந்திநகர், சண்டிகார், குர்கிராம், ஜாம்நகர், லக்னோ ஆகிய நகரங்களிலும் 5-ஜி சேவை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்த நகரங்களில் அனைவருக்கும் 5-ஜி சேவை கிடைக்குமா? என்றால் குறிப்பிட்ட பகுதியிலிருந்து 5-ஜி சேவை நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யவிருப்பதாகவும் தெரிகிறது. அப்படி சேவை தொடங்கினால் அதனை உங்கள் செல்போனில் எப்படி ஆக்டிவ் செய்யலாம் என்பதையும் பார்க்கலாம்...

முதலில் உங்கள் செல்போன் 5-ஜி அலைக்கற்றையில் இயங்குவதாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் Android போனின் Settings செயலிக்கு செல்லவும்.. அங்கு 'Wi-Fi & Networks' என ஆப்ஷனை கிளிக் செய்யவும். அப்போது 'SIM & Network' ஆப்ஷனை கிளிக் செய்தால், அனைத்து சேவைகளையும் காணலாம். அதில் 2G/3G/4G/5G என பட்டியலிடப் பட்டிருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்தால் 5-ஜி சேவையை பெறலாம்.

உங்கள் செல்போன் 5-ஜியில் இயங்கும் வசதியை கொண்டி ருக்கவில்லை எனில், இந்த வசதியை அனுபவிக்க புதிய ஸ்மார்ட்போன் தான் வாங்க வேண்டும்... மற்றப்படி இப்போது பயன்பாட்டில் இருக்கும் 2-ஜி, 3-ஜி, 4-ஜி சேவைகள் தொடரும்...


Tags:    

மேலும் செய்திகள்