President Droupadi Murmu | குடியரசு தலைவரின் ஆப்பிரிக்க நாட்டு பயணம் - வெளியான அப்டேட்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாகச் செல்ல இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரும் நாளை 8ம்தேதி முதல் 11ஆம் தேதி வரை அங்கோலா நாட்டிற்குச் செல்லும் அவர், அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும், பிறகு 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா பயணிக்கும் குடியரசு தலைவர் அந்நாட்டு அதிபரை சந்திக்கவுள்ளார்.