உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கன்வர் யாத்திரிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கோயில் குறித்து இளைஞர் ஒருவர் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததால் ஆக்கிரமடைந்த கன்வர் யாத்திரிகர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனங்களை சூறையாடி சேதப்படுத்தியதோடு அங்கிருந்த தடுப்புகளையும் தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது .