பஹல்காம் தாக்குதல் - ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் எடுத்த முடிவு

Update: 2025-04-28 14:26 GMT

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில், ஒருநாள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்பாவி மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான கொடூரமான, கோழைத்தனமான செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியா மேற்கொண்டுள்ள ராஜாங்க நடவடிக்கைகளுக்கு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்