நாடு தழுவிய போர் ஒத்திகை- நாளை என்ன நடக்கும்?.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? - அலர்ட்.. அலர்ட்

Update: 2025-05-06 02:14 GMT

தாக்குதல் நடத்தப்பட்டால் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்தும், மாநில அரசுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வான்வழித் தாக்குதல், எச்சரிக்கை சைரன்களை இயக்குதல், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி, பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல் உள்ளிட்டவை ஒத்திகையில் இடம்பெறும்.

Tags:    

மேலும் செய்திகள்