Modi | BJP| பிரதமர் மோடி போட்ட பிளான் - இந்தியாவுக்கு காத்திருக்கும் செய்திகள்

Update: 2025-12-12 03:39 GMT

பிரதமர் மோடி அடுத்த வாரம் 3 நாடுகளுக்கு பயணம், ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா ஆகிய மூன்று நாடுகளுக்கு அடுத்த வாரம் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பை ஏற்று டிசம்பர் 15 ஆம் தேதி ஜோர்டான் நாட்டுக்கு பயணிக்கும் பிரதமர் மோடி, எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பை ஏற்று டிசம்பர் 16ஆம் தேதி எத்தியோப்பியாவிற்கும், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அழைப்பை ஏற்று டிசம்பர் 17 முதல் 18ஆம் தேதி வரை ஓமனுக்கும் பிரதமர் மோடி பயணிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த பயணம் மூன்று நாடுகள் உடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்