காணாமல் போன சிறுவன்... 10 ஆண்டுகளுக்கு பின் மீட்பு! - நெகிழ்ச்சி சம்பவம்
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுவனை காவல் துறையினர் ஹரியானாவில் மீட்டு பெற்றோரிடம் ஓப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் 15 நாட்களுக்கு முன்பு குழந்தை ஒன்று காணாமல் போனது. இதில் குழந்தையை கடத்தியவரை பிடித்து போலீசார் விசாரித்த போது மற்றொரு சிறுவனையும் மீட்டுள்ளனர். பின்னர் சிறுவனின் வழக்கு விவரங்களை கண்டறிந்த போலீசார் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு காவல்நிலையத்திற்கு வரவழைத்து பெற்றோரிடம் அந்தச் சிறுவனை ஓப்படைத்தனர்.