இந்தியாவில் பரவும் விசித்திர நோய்.. கொத்து கொத்தாக மரணம்.. உயரும் சாவு | Guillain-Barre Syndrome
புனேவில் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் பாதிக்கப்பட்டு
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிபிஎஸ் நோயால் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டு 179 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நோயாளிகள் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில அரசு கூறியுள்ளது.