போதையில் சாலையில் கிடந்த நபர் மீது ஏறி சென்ற சொகுசு வாகனம்
ஹரியானா மாநிலம் குருகிராமில் மது போதையில் சலையில் படுத்து கிடந்த நபர் மீது சொகுசு கார் மேலே ஏறி உள்ளது. குருகிராமில் உள்ள புதேஷ்வர் கோவில் அருகே சொகுசு காரில் வந்தவர்கள் மதுபோதையில் சாலையின் நடுவே படுத்து கிடந்தவரை கவனிக்காமல் டயரை அவர் மீது ஏற்றி உள்ளனர். கார் ஏறிய பிறகும் அவர் எழுந்து மீண்டும் சற்று சாலையில் படுத்துள்ளார். இந்த சம்பவத்தில் போதையில் கிடந்த நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.