🔴LIVE : Today Headlines | காலை 8 மணி தலைப்புச் செய்திகள் (10.10.2025) | 8 AM Headlines | ThanthiTV

Update: 2025-10-10 02:51 GMT
  • தமிழகத்தில் திருவள்ளூர், தேனி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திடீர் கனமழை பெய்தது.... சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது...
  • கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்ம‌புரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
  • தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16ம் தேதி தொடங்க சாத்தியம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.... வங்கக்கடலில் அக்டோபர் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
  • அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்... தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது....
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது...... சிபிஐ விசாரணைக்கான உத்தரவை ரத்து செய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.....
Tags:    

மேலும் செய்திகள்