இளைஞர் காங்கிரஸார் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார் - கேரளாவில் பரபரப்பு

Update: 2025-01-21 13:06 GMT

கேரளாவில் மதுபான ஆலை அமைக்கும் விவகாரத்தில், இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில், மதுபான ஆலை அமைக்க அனுமதி வழங்கி கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸார், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களை, தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்