Kerala | பைக் மீது வேகமாக மோதிய கார்.. பறந்து விழுந்து ஸ்பாட்டிலே இளைஞர் பலி -பதறவைக்கும் காட்சி

Update: 2025-09-25 07:29 GMT

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்து - இளைஞர் உயிரிழப்பு

கேரள மாநிலம் கொல்லம் அருகே, இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் புனலூர் சாலையில், சங்கீத் என்ற இளைஞர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் தலையில் பலத்த காயமடைந்த சங்கீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்