கர்நாடகாவை உலுக்கிய வங்கி கொள்ளையில் அதிர்ச்சி திருப்பம்.. திடுக் பின்னணியில் நெல்லை நபர்..
கர்நாடகாவை உலுக்கிய வங்கி கொள்ளையில் அதிர்ச்சி திருப்பம்.. திடுக் பின்னணியில் நெல்லை நபர்..
கர்நாடகாவில், வங்கி கொள்ளை அடித்து விட்டு, தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் பதுங்கியவர்களை கர்நாடக போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மங்களூர் அருகே ஒரு வங்கியில், கடந்த 17ஆம் தேதி துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்டவையைக் காட்டி, இக்கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இதில், வங்கியில் இருந்து சுமார் 4 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணத்தைக் கொள்ளை அடித்து விட்டு, கேரளா வழியாக தமிழ்நாடு வந்ததாக, திருநெல்வேலி மாவட்டம், பத்மநேரி கிராமத்தைச் சேர்ந்த முருகாண்டி என்பவரை தனிப்படை போலீஸ் கைது செய்தனர். இவரிடமிருந்து, மும்பை பதிவெண் கொண்ட கார், 2 துப்பாக்கி, 3 குண்டுகள், 2 மூட்டைகளில் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்விவகாரத்தில், அவருடன் இருந்த மேற்கு மும்பை பகுதியைச் சேர்ந்த யோசுவா ராஜேந்திரன், கண்ணன் மணி ஆகியோரையும் கைது செய்ததாக, மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் தெரிவித்து உள்ளார். இதில் முருகண்டி தேவரே முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதாகவும் தெரியவந்து உள்ளது.