Jammu Kashmir | Crpf | Viral Video | ``அய்யோ.. எல்லாமே போச்சே''.. எல்லையில் கதறி அழுத CRPF வீராங்கனை

Update: 2025-08-05 03:54 GMT

Jammu Kashmir | Crpf | Viral Video | ``அய்யோ.. எல்லாமே போச்சே''.. எல்லையில் கதறி அழுத CRPF வீராங்கனை

தனது திருமணத்திற்காக வைத்திருந்த நகை கொள்ளைபோனதாக காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வீராங்கனை கதறி அழும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் நாராயணபுரம் பகுதியை சேர்ந்த கலாவதி, CRPF காவலராக ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 24ஆம் தேதி இவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில், 22 சவரன் நகை கொள்ளைபோனதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குமுறியுள்ளார்.

தோளில் தேசியக் கொடியை ஏந்தியபடி சீருடையில் இருக்கும் பெண்ணை நீதிக்காக இணையத்தில் கெஞ்ச வைக்கும் நிலைக்கு அரசு தள்ளிவிட்டதாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்