ரெஸ்யூம், டிகிரி தேவையில்ல.. இது இருந்தா போதும்..40 லட்சம் சம்பளம்..! பிரபல நிறுவனம் அருமையான ஆஃபர்
பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனரின் வேலை வாய்ப்பு பதிவொன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் சுதர்ஷன் காமத், தன்னுடைய அலுவலகத்தில் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய நிறுவனத்தில் ரெஸ்யூமோ, பட்டப்படிப்போ அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், 100 வார்த்தைகளில் சுய அறிமுகமும்,முந்தைய பணியின் சிறப்பம்சங்களும் இருந்தால் போதும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைவாய்ப்பு பதிவு இணையத்தில் வேகமாக பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது...