கேரளாவில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால், போக்கு வரத்து முடங்கிய நிலையில் பரிதவித்த நோயாளிகளுக்கு காவல்துறையினர் உதவி செய்துள்ளனர்.
கேரளாவில் சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., உட்பட, 13 தொழிற்சங்கங்கள், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வெளியூரிலிருந்து வந்த நோயாளிகள் திருவனந்தபுரத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதற்காக ரயில் நிலையம் மற்றும் தம்பானூர் பேருந்து நிலையத்தில் பரிதவித்தனர். இதையடுத்து அவர்கள் காவல் துறை வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.