உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை சந்திக்க வந்த சிறுமியின் டாக்டர் ஆசையை நிறைவேற்றுவதாக, உபி. முதல்வர் உத்தரவாதம் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில், ஜனதா தர்ஷன் எனும் பெயரில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் மக்களை சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் தன்னை சந்திக்க வந்த மாய்ரா எனும் சிறுமி, தான் மருத்துவர் ஆக வேண்டும் என கூறியதால், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.