Governor || பிரதமர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணைநிலை ஆளுநர்

Update: 2025-09-19 15:49 GMT

பாகூர் கிராமத்தில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி தலைமை தாங்க 750 பெண்கள் பிரதமர் உடல் நலம் வேண்டியும், உலக நன்மை வேண்டியும் விளக்கு பூஜை செய்தனர். இதனை துணைநிலை ஆளுநர் கைலாசநாதனின் மனைவி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 750 மாற்றுத்திறனாளிகளுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளிகளில் குறைகளை கேட்டறிந்த அவர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்